அரியலூரில் பலத்த மழை

அரியலூரில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-08-26 19:41 GMT
அரியலூர்:
அரியலூர் நகரில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் இல்லை. நேற்று பகலிலும் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, பின்னர் பலத்த மழையாக மாறியது. சாலைகளில் மழைநீர் ெபருக்கெடுத்து ஓடியது. மழையால் குளிர்ந்த சிதோஷண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்