தாராபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாராபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாராபுரம்,
தாராபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனு செயல்முறை ஆணையின்படி 71 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில் 15-க்கும் மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொலை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், தொலை தூர பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடை விதிக்க வேண்டும்
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொலைதூரம் பணியிட மாறுதல் செய்வதை மாவட்ட கலெக்டர் வினீத் தடை விதிக்க வேண்டும் என்றனர். மேலும், 3 ஆண்டுகளுக்கு மேலாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், பணிபுரிகிறவர்களுக்கு மீண்டும் அதே மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலேயே கலந்தாய்வு நடத்துவது பலனளிக்காது.
ஊழியர்களின் தகுதித்திறனும், மிகவும் பாதிக்கப்படும் என கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு்ள்ளது. எனவே முறையான தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.