ஆற்காட்டில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். வாலிபர் கைது
ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
ஆற்காடு
ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு ராமலிங்கம் தெரு பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஆற்காடு மாசாபேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 32) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.