தொடர் மழை காரணமாக மேலூர்-காரைக்குடி 4 வழிச்சாலை பணி பாதிப்பு
தொடர் மழை காரணமாக மேலூரில் இருந்து காரைக்குடி வரை நடைபெற்று வந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
தொடர் மழை காரணமாக மேலூரில் இருந்து காரைக்குடி வரை நடைபெற்று வந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
4 வழிச்சாலை பணி
இந்த நான்கு வழிச்சாலை பணியில் மொத்தம் 19 இடங்களில் சுரங்கப்பாதையுடன் கூடிய தரைப்பாலமும், 2 இடங்களில் உயர் மட்ட மேம்பாலமும் கட்டப்பட உள்ளது. மேலும் காரைக்குடி அருகே குன்றக்குடி-தட்டட்டி ரோடு, திருப்பத்தூர்-மானகிரி ரோடு, திருப்பத்தூர்-கண்டரமாணிக்கம் வழியாக இந்த புதிய 4 வழிச்சாலை பணி நடைபெற உள்ளது. இந்த சாலை கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்தாண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு காரணமாகவும் இந்த பணிகள் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.
மழையால் பணி பாதிப்பு
இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பாலம் அமைக்கும் இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பணியில் மேலும் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. திருப்பத்தூர் நாச்சியார்புரம் பகுதியில் 4 வழிச்சாலை பணிக்காக அமைக்கப்படும் பாலம் பகுதியிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
பயணதூரம் குறையும்
மேலூர்-காரைக்குடி இடையே நடைபெற்று வரும் இந்த நான்கு வழிச்சாலை பணியானது மொத்தம் 2 ஆண்டுகள் காலத்திற்குள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக 4 வழிச்சாலை பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த பணிகள் முற்றிலும் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வந்தால் மேலூர்-காரைக்குடி இடையேயான பயணம் தூரம் 14 கிலோ மீட்டர் தூரம் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.