வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணி முடிவது எப்போது விவசாயிகள் எதிர்பார்ப்பு
வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணி முடிவது எப்போது விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
இங்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைதுறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகதுறை, வேளாண் பொறியியல்துறை அலுவலகங்கள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் குடோன்களும் அமைக்கப் பட்டு உள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 9 மாதங்களில் இந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டன. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முடியவில்லை.
இதனால் தற்போது உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே புதிய கட்டிட பணியை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.