விருத்தாசலம் அருகே வடிகால் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாணவர் சாவு
விருத்தாசலம் அருகே வடிகால் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிாிழந்தாா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . இவரது மகன் அருண்குமார்(வயது 16). இவர் மங்கலம்பேட்டை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அருண்குமார் நேற்று மாலை அப்பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து அப்பகுதியிலிருந்த வடிகால் வாய்க்காலில் விழுந்தது.
அங்கு சாலை விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டு பட்டு இருந்ததால், அதில் மழைநீரும் தேங்கி நின்றது. இதை அறியாமல் வாய்க்கால் பகுதிக்குள் அருண்குமார் இறங்கியபோது, அதில் உள்ள சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தண்ணீரி மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.