முதுமலையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்

முதுமலையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்

Update: 2021-08-26 16:56 GMT
கூடலூர்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஜீப்  டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா தலங்கள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 23-ந் தேதி மூலம் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் அன்றாடம் நடைபெறும் அலுவலக பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

முதுமலை புலிகள் காப்பகம்

இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா சார்ந்த தொழில்கள் வேலைவாய்ப்புகள் முடங்கி உள்ளது. குறிப்பாக மசினகுடி பகுதியில் வாகன சவாரி (ஜீப்)தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான டிரைவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர்.

 பல மாதங்களாக போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தமிழக அரசு அறிவித்த ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் மசினகுடி பகுதியில் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வாகன சவாரி டிரைவர்கள் கூறும்போது, அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தை திறந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்