10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால், 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-26 16:31 GMT
வேடசந்தூர்:

 10-ம் வகுப்பு மாணவி

வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டையை சேர்ந்தவர் ராஜேஷ். தச்சுத் தொழிலாளி. அவருடைய மனைவி அனுசுயா. இந்த தம்பதியின் மகள் கோபிகா (வயது 16). இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

தற்போது பள்ளிகள் திறக்காததால், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் கோபிகாவின் பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்தனர்.   

அந்த செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் கோபிகா பங்கேற்று வந்தார்.மற்ற நேரங்களில், டிக்-டாக் வீடியோ மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செல்போனில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. தான் பார்க்கிற நிகழ்ச்சியை போல கோபிகா தனது தோழிகளிடம் நடித்து காட்டியதாக தெரிகிறது.

இதனால் கோபிகாவை அவருடைய பெற்றோர் பலமுறை கண்டித்தனர். ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து செல்போனை பார்த்து கொண்டே இருந்தார்.

 தூக்குப்போட்டு தற்கொலை

 இந்த நிலையில் நேற்று காலையில் எழுந்த கோபிகா, செல்போனில் டிக்-டாக் வீடியோவை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவருடைய பெற்றோர், கோபிகாவை திட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இதனால் மனம் உடைந்த கோபிகா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அதே ஊரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அடிக்கடி செல்போனை பார்த்ததால் அவரது பாட்டி கண்டித்தார். இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவியும், தற்போது தற்கொலை செய்த கோபிகாவும் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்