நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள இடையன்விளை சவாித்தநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). இவர் தென்காசியில் ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அண்ணப்பூ தினசரி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இரண்டாவது மகள் ராதிகா ( 17) நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் ராதிகா அதிகநேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை தாயும், அண்ணனும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராதிகா சுடிதார் துப்பட்டாவால் வீட்டிலிருந்த பேனில் தூக்குப் போட்டு தொங்கியுள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.