ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான திருவண்ணாமலை பகுதியில் அதிகாலை நேரங்களில் மோட்டார்சைக்கிளில் மணலை மூடைகளாக கட்டி கடத்துவதாக சப்-கலெக்டர் பிரித்திவிராஜ்க்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த தகவலை தொடர்ந்து மல்லி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சாலையில் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் (வயது39) என்பவர் மோட்டார் சைக்கிளில் மணலை மூடையாக கட்டி கடத்தி வந்தார். அவரை பிடித்து மணல் கடத்திய சுந்தர மகாலிங்கம் மற்றும் மோட்டார் சைக்கிள், மணல் மூடை களை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர். நகர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.