ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம்

பள்ளிகள் திறப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் நடந்தது.

Update: 2021-08-26 14:31 GMT
விருதுநகர், 
பள்ளிகள் திறப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் நடந்தது.
கலந்தாய்வு
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி விருதுநகரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தலைமையில் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் நடைபெற்றது. முகாமில் விருதுநகர் மற்றும் அருப்புக் கோட்டை கல்வி மாவட்டங்களை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் பேசிய முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ- மாணவி களின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருதி பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தூய்மைப் பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 
வழிகாட்டு நெறிமுறை
மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய்த்தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். முகாமில் விருதுநகர் கல்வி மாவட்ட அதிகாரி பெருமாள், அருப்புக் கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்