வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கருடா செயலி குறித்த பயிற்சி விளக்கக் கூட்டம் தாசில்தார் தனக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி மற்றும் பயிற்சி குறித்து விளக்கப்பட்டது. தேர்தல் துணை தாசில்தார் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.