டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது

உத்திரமேரூர் மல்லியங்கரனை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 17-ந்தேதி மர்ம நபர் ஒருவர், யுவராஜ் (வயது 28) மற்றும் சுந்தரமூர்த்தி (33) ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

Update: 2021-08-26 11:15 GMT
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கிடமான ஒருவர் டாஸ்மாக் கடை அருகே மது குடிக்க வந்திருந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லவே அவரை உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் டாஸ்மாக் கடையில் 2 பேரை வெட்டியதை ஒப்பு கொண்டார். விசாரணையில் அவர் உத்திரமேரூர் ஒன்றியம் அண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்