செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் சுமார் 58 பேர் தற்காலிக தூய்மை பணியாளா்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.422.50 ஊதியமாக வழங்க வேண்டும், சீருடை, கையுறை, காலணி வழங்க வேண்டும், வாரம் ஒருநாள் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் நித்யா தலைமையில் ஊரக உள்ளாட்சித்துறை தற்காலிக தூய்மை பணியாளா்கள் சங்க செங்கோட்டை கிளைத்தலைவா் முருகேஸ்வரி, துணைத்தலைவா் மாரி, செயலாளா் முருகேசன், துணைச்செயலாளா்கள் பகவதி, மாரிச்செல்வன், தமிழரசி, பொருளாளா் முத்துகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளா் வேல்முருகன், வட்டார தலைவா் வன்னியபெருமாள், விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொருளாளா் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினா். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 30-ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.