தென்காசி மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு ரோந்து வாகனங்கள்

தென்காசி மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.

Update: 2021-08-25 20:23 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத அளவிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கும் விதமாகவும், குற்றச் செயல்கள் நடந்தால் விரைவாக சம்பவ இடத்திற்கு செல்லும் வகையிலும் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 29 போலீஸ் நிலையங்களில் தென்காசி மற்றும் குற்றாலத்திற்கு தலா 2 வாகனங்களும், மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு வாகனமும் என 31 இருசக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதனை நேற்று மாலை புதிய பஸ் நிலையம் அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மார்ட்டின், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்