மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை
கபடி போட்டிக்கு வந்த இடத்தில் மாணவிக்கு பாலியல் தொல்ைல ெகாடுத்த உடற்கல்வி ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கபடி போட்டிக்கு வந்த இடத்தில் மாணவிக்கு பாலியல் தொல்ைல ெகாடுத்த உடற்கல்வி ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மாணவிக்கு பாலியல் தொல்லை
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் (வயது 48).
இவர் கடந்த 3-8-2018-ந் தேதியன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் நடந்த கபடி போட்டிக்கு கலந்து கொள்ள வந்தார். அப்போது அங்கு வந்த 16 வயது மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
14 ஆண்டுகள் சிறை
அந்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி தனசேகரன் விசாரித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வனுக்கு கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த தண்டனை தனி, தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.