ஆலமரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அருப்புக்கோட்டையில் ஆலமரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தில் பெரிய கண்மாய் கரையோரம் உள்ள ஆலமரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து கிராம மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.