இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
கரூரில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்,
வரதட்சணை கொடுமை
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி ஷா நகரை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மனைவி யாஸ்மின் பர்வீன் (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.
இந்தநிலையில் கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் யாஸ்மின் பர்வீன் புகார் அளித்தார்.
5 பேர் மீது வழக்கு
இதையடுத்து, அப்துல் ரஹீம், அவரது தந்தை ஆசிக்இலகை, தாய் பரக்கத் நிஷா மற்றும் உறவினர்கள் ஜமால் முஹம்மது, அசினா பர்வீன் ஆகிய 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.