முககவசம் அணிந்து பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்
முககவசம் அணிந்து பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக முளைப்பாரி திருவிழா நடைபெறவில்லை. இதையடுது்து கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலக மக்களை காப்பாற்றவும், விவசாயம் செழிக்கவும் முத்துமாரி அம்மனை வேண்டிகிராம மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி யுடன் முளைப்பாரி எடுத்து மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர்.