திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது
திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை,
திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மிரட்டல்
மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் இரவில் மானாமதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அரிவாள், கத்தியைகாட்டி கணேசனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் மறுத்ததால்தலை, முகம் ஆகிய பகுதியில் கொடூரமாக தாக்கி விட்டு கைப்பேசி மற்றும் பணத்தை எடுத்து சென்றனர்.
கணேசனை வெட்டுவதை கண்ட அவரது நண்பர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கணேஷை காவல்துறையினர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கைது
இதன் தொடர்ச்சியாக மற்றொரு வழிப்பறியில் ஈடுபட்ட அதே 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை மிரட்டி கைபேசி, வங்கி ஏ.டி.எம் கார்டை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.