திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-25 17:29 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று(புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருவாரூர் பகுதியில் திருவாரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடியக்கமங்கலம், கோமல், கொட்டாரக்குடி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் குழந்தை நலத்துறை, கொரடாச்சேரி பகுதியில் பெரும்பண்ணையூர், குளிக்கரை, அத்திக்கடை, கண்கொடுத்தவணிதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

மன்னார்குடி பகுதியில் மன்னார்குடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கூத்தாநல்லூர், பரவாக்கோட்டை, புனவாசல், உள்ளிக்கோட்டை, சாத்தனூர், தலையாமங்கலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மன்னார்குடி ஜெயம்கொண்ட நாடார் பள்ளி, அசேஷம் அரசு தொடக்கப்பள்ளி, மன்னார்குடி தூயவளவனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

நீடாமங்கலம்-கோட்டூர்

இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் ராயபுரம், வடுவூர், கோவில்வெண்ணி, தளிக்கோட்டை, பொதக்குடி, பேரையூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி பகுதியில் கொற்கை, ஆலத்தம்பாடி, விளக்குடி, திருத்துறைப்பூண்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஆலத்தம்பாடி, கொருக்கை, விளக்குடி, திருத்தங்கூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கீரக்களுர் நக்கீரனார் பள்ளி, பூசலாங்குடி மினி கிளினிக், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

கோட்டூர் பகுதியில் ஆதிச்சபுரம், திருமக்கோட்டை, களப்பால், ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், முத்துப்பேட்டை பகுதியில் முத்துப்பேட்டை, சங்கேந்தி எடையூர், இடும்பாவனம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், முத்துப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

அரசு மருத்துவமனைகள்

குடவாசல் பகுதியில் திருவிழிமிழலை, திருவிடச்சேரி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வலங்கைமான் பகுதியில் ஆலங்குடி, இனாம்கிளியூர், ஆவூர், அரித்துவாரமங்கலம், வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நன்னிலம் பகுதியில் பூந்தோட்டம், பேரளம், ஆணைக்குப்பம், திருவாஞ்சியம், பாவட்டக்குடி, உபயவேதந்தபுரம், கொல்லாபுரம், வேலங்குடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம், திருவாரூர் விஜயபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:-

நடமாடும் வாகனம்

திருவாரூர் பகுதியில் விளமல், நடப்பூர், ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தண்டலை, சூரனூர் ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும், கொரடாச்சேரி பகுதியில் களத்தூர், கீழ எருக்காட்டூர் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், களத்தூர் மேல்கரை, மேல எருக்காட்டூர் ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையும், நீடாமங்கலம் பகுதியில் சம்பாவேலி, சாத்தனூர் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தட்டி, முக்குளம் ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரிய கொற்கை ரேடியோ பில்டிங், பனையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ரொக்ககுத்தகை சங்கலிவீரன் கோவில் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கொற்கை கண்ணமேடு, கோமலபேட்டை, திருத்துறைப்பூண்டி ரேவதி அரசு உதவிப்பெறும் பள்ளி ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும், கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும் தடுப்பூசி போடப்படுகிறது.

முத்துப்பேட்டை-நன்னிலம்

முத்துப்பேட்டை பகுதியில் ஓவர்குடி தில்லைவிளாகம், ஓவூர் ஆகிய இடங்களில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கே.ஏ.பி. மேல்நிலைப்பள்ளி மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும், குடவாசல் பகுதியில் ஆவணம், விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பருத்தியூர், கண்டிரமாணிக்கம், சரபோஜிராஜபுரம் ஆகிய இடங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், உள்ளிக்கோட்டை பகுதியில் மேல நாகை, வடபதி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கீழநாகை, சித்திரை ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும் தடுப்பூசி போடப்படுகிறது.

நன்னிலம் பகுதியில் பனங்குடி, கமுக்குடி, தென்கரை வடுகக்குடி ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், கண்ணன்தோப்பு, மாப்பிள்ளைகுப்பம் ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும், வலங்கைமான் பகுதியில் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணலூர் ஆகிய இடங்களில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், ஆலங்குடி, உத்தாணி, தெற்குபாட்டம் ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரையும் கொரோனா தடுப்பூசி போடுப்படும். இந்த தகவலை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்