மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 951 ஆக உயர்ந்தது. கொரோனா சிகிச்சையில் 26 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிககை 381 ஆக உள்ளது.