தேவாரம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

தேவாரம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2021-08-25 16:00 GMT
தேவாரம், ஆக.26-
தேவாரம் அருகே கோம்பையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய வட்டப்பாறை என்ற இடத்தில் சின்னக்கண்ணு மற்றும் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களுக்குள் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள், தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. 
மேலும் தோட்டங்களில் இருந்த தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தும் குழாய்கள், மின்மோட்டார் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தின. விடிய, விடிய அட்டகாசம் செய்த யானைகள், நேற்று காலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதற்கிடையே வழக்கம்போல் தோட்டங்களுக்கு வந்த சின்னக்கண்ணுவும், கண்ணனும் பயிர்கள் நாசமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
எனவே காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்