நரிக்குறவர்கள் குழந்தைகள் 15 பேர் பள்ளியில் சேர்ப்பு
நரிக்குறவர்கள் குழந்தைகள் 15 பேர் பள்ளியில் சேர்ப்பு
கலவை
கலவைதாலுகா திமிரி ஒன்றியத்தில் உள்ள செங்கணவரம்கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். திமிரி வட்டார கல்வி அலுவலர் சண்முகானந்த பாபு, திமிரி வட்டார மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகன் ஆகியோர் தலைமையில் நேற்று நரிக்குறவர் பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 15 பள்ளி செல்லா நரிக்குறவர்கள் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் கொடுத்து செங்கணவரம் நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். பள்ளி தலைமையாசிரியர், குழந்தை தொழிலாளர் நல வாழ்வு திட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.