7 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-24 20:25 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 656 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 68 பேரில் 17 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 229 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்