14 பேருக்கு கொரோனா

புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-24 20:23 GMT
மதுரை, 
மதுரையில் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 11 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 908 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 12 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றில் இருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 156 பேர் சிகிச்சையில் இருக்கி றார்கள். நேற்று மதுரையில் கொரோனாவிற்கு யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் இதுவரை உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 1,150 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்