சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்- கலெக்டர் விஷ்ணு வழங்கினார்
நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை, கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
2020-ம் ஆண்டு நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில், தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பயிற்சி பெற்று 24 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற 24 மாணவர்களை கலெக்டர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் அவர்களுக்கு காவல்துறையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, உதவி இயக்குனர்கள் ஹரிபாஸ்கர், சகாய ஆண்டனி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சையது முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.