தூக்குப்போட்டு பெண் தற்கொலை
காரியாபட்டியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காரியாபட்டி,
காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (வயது 31). இவருக்கு 5 வயதில் ஒரு குழந்தையும் 1 மாத குழந்தையும் உள்ளது. தற்போது பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாததால் சங்கரேஸ்வரி மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சங்கரேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.