வலையில் சிக்கிய மான் இறைச்சியை சமைத்த என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பேரணாம்பட்டு அருகே வலையில் சிக்கிய மான் இறைச்சியை சமைத்த என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-08-24 18:20 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே வலையில் சிக்கிய மான் இறைச்சியை சமைத்த என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வலையில் சிக்கிய மான்

வேலூர் மண்டல வன பாதுகாவலர் சுஜாதா மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர் முரளிதரன் மேற்பார்வையில் பேரணாம்பட்டு வனசரகர் சங்கரய்யா தலைமையில் வனவர்கள் ஹரி, மோகனேவல், வனகாப்பாளர் விஸ்வநாதன், வன காவலர் ரவி ஆகியோர் பல்லலகுப்பம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல்லலகுப்பம் துலுக்கன் குட்டை வனப்பகுதியையொட்டி ஒரு கும்பல் மானை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக வனத்துறையினர்க்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துலுக்கன் குட்டையைச் சேர்ந்த விவசாயி பரசுராமன் (55) தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள வேர்க்கடலையை வனவிலங்குகள் நாசம் செய்யாமலிருக்க சுருக்கு கம்பி வலை அமைத்துள்ளார். அதில் நேற்று அதிகாலை சுமார் 2 வயதுள்ள பெண்புள்ளி மான் ஒன்று சிக்கி இறந்தது. 

2 பேருக்கு அபராதம்

இறந்த புள்ளிமானை பரசுராமனும், அதே கிராமத்தைச் சேர்ந்த ென்ஜினீயர் பாஸ்கர் (34) என்பவரும் சேர்ந்து வெட்டி எடுத்து சென்று வீடுகளில் சமைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. வனத்துறையினர் அங்குசென்றனர். அப்போது பரசுராமன், மான் இறைச்சியை கிணற்றில் வீசினார். அருகிலுள்ள புதரில் மறைத்து வைத்திருந்த மான் தலையை வனத்துறையினர் மீட்டனர். சுமார் 2 கிலோமான் இறைச்சி, வெட்டு கத்தி, சுருக்கு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் பரசுராமன், பாஸ்கர் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்