ஓட்ட பயிற்சி மேற்கொண்ட வாலிபர், கார் மோதி சாவு

மானாமதுரை அருகே ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட வாலிபர், கார் மோதி பலியானார்.

Update: 2021-08-24 18:20 GMT
மானாமதுரை,

மானாமதுரை அருகே ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட வாலிபர், கார் மோதி பலியானார்.
இந்த பரிதாப சம்பலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார் மோதியது

மானாமதுரை அருகே உடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது 20). இவர் இந்திய ராணுவத்தில் சேருவதற்காக தன்னை தயார்படுத்தி வந்தார். இந்த நிலையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் விக்னேஸ்வரன் நேற்று அதிகாலை ஓட்ட பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது ராஜகம்பீரம் என்ற இடத்தில் ஓடிய போது அந்த வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார், அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேசுவரன் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை ேபாலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்