போடிப்பட்டி:
மடத்துக்குளத்தையடுத்த உடையார்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), தொழிலாளி. இவருக்கு கல்யாணி என்ற மனைவியும் புனிதா (22), புவனேஸ்வரி (19) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் இவர் காரத்தொழுவு பகுதியிலுள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு சாலையோரமாக செல்வராஜ் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக செல்வராஜ் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய செல்வராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்துக்கு வந்த கணியூர் போலீசார் செல்வராஜின் உடலைக் கைப்பற்றி உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.