ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-24 16:14 GMT
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டு கிராமத்தில் பொது இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

அதனை மீட்டு அந்த இடத்தில் அங்கன்வாடி மற்றும் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என கூறி அந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மேலும் அந்த வழியாக வந்த பஸ்சையும் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்