கவர்னர் பங்களாவை 10 கோடியில் புதுப்பிக்கும் பணி

கவர்னர் பங்களாவை 10 கோடியில் புதுப்பிக்கும் பணி

Update: 2021-08-24 15:32 GMT
கோவை

கோவையில் ரெயில் நிலையம் அருகில் உள்ள முன்சீப் கோர்ட்டு கட்டிடம், கோவை- திருச்சி ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் பின்புறம் உள்ள கவர்னர் பங்களா ஆகிய 2 கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இதில் 2.60 ஏக்கர் பரப்பளவில் உள்ள முன்சீப் கோர்ட்டு ரூ.9.01 கோடியிலும், 14 ஆயிரத்து 947 சதுர அடியில் முதல் தளம் மற்றும் தரை தளத்துடன் கூடிய கவர்னர் பங்களா ரூ.10.25 கோடியிலும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. 

இதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். அவருடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

மேலும் செய்திகள்