ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2021-08-24 14:26 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். 

இதில் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் அமல்ராஜ், துணை தலைவர் நடராஜன், பொருளாளர் பொன்ராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் 11 சதவீத அகவிலைப்படியை 2021 ஜூலை முதல் வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்