குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியா? கலெக்டர் பதில்
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் பதில் அளித்து உள்ளார்.
தென்காசி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கப்பட்டு ஓரிரு நாட்களில் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜிடம் கேட்டபோது, இந்த தகவலில் உண்மை இல்லை. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றார்.