காமாட்சி அம்மன் கோவில் விழா

காமாட்சி அம்மன் கோவில் விழா

Update: 2021-08-23 21:08 GMT
மேலூர்
மேலூரில் பஸ் நிலையம் அருகே விஷ்வகர்மா சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆவணி மாத உற்சவ விழா நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது. விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். கோவில் நிர்வாக தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்