சலவை தொழிலாளி தற்கொலை
நெல்லை அருகே சலவை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
நெல்லையை அடுத்த ேபட்டை நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). சலவை தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். 2 மகன்களும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் கோவிந்தன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது காலில் புண் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கோவிந்தன் நேற்று பேட்டை கருங்காடு மயான கரையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.