லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது
செங்கோட்டை அருகே லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவை நிறுத்தி, அதில் வந்தவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வைத்திருந்ததும், அவற்றை விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் தெற்கு கல்லிடைக்குறிச்சி புது காலனியைச் சேர்ந்த அழகேசன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அழகேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 240 லாட்டரி சீட்டுகள், ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.