தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

சிவகிரி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-23 19:44 GMT
சிவகிரி:
சிவகிரி பவுண்டு தொழுத் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 35). இவர் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராதிகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கோவிந்தராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ், சிவகிரி- விஜயரங்கபேரி கண்மாய் செல்லும் பாதையில் உள்ள புளியந்தோப்பில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை ெசய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சிவகிரி போலீசார் விரைந்து சென்று, கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்