மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை; அதிர்ச்சியில் மீதி விஷத்தை குடித்து தந்தையும் சாவு
அருப்புக்கோட்டையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மீதமுள்ள விஷத்தை குடித்து அவருடைய தந்தையும் உயிரைவிட்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மீதமுள்ள விஷத்தை குடித்து அவருடைய தந்தையும் உயிரைவிட்டார்.
வீடியோ கிராபர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரச மூப்பர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய மனைவி பிச்சையம்மாள் (55). இவர்களுடைய மகன் செந்தில்குமார் (31), மகள்கள் சர்மிளா, சங்கீதா.
மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. வீடியோ கிராபராக பணியாற்றி வந்த செந்தில் குமார், தனது தாய்-தந்தையுடன் வசித்து வந்தார்.
தந்ைத - மகன் சாவு
இந்தநிலையில் செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செந்தில்குமார் தனது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, தான்விஷம் குடித்ததாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜூவும் மீதம் உள்ள விஷத்தை குடித்துள்ளார்.
இதையறிந்த பிச்சையம்மாள் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த சோக சம்பவம் குறித்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.