அரக்கோணம் நகர சார் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் போராட்டம்

அரக்கோணம் நகர சார் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் போராட்டம்

Update: 2021-08-23 18:55 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தில் நில அளவை பதிவேடுகள் துறை நகர சார் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் கடந்த 2 மாதங்களாக சரிவர திறக்கப்படவில்லை பூட்டியே கிடக்கிறது. பூட்டிக்கிடக்கும் அலுவலகம் முன்பு பொதுமக்கள் பலர் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் வாங்கிய சொத்துகளை பட்டா பெயர் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு ஆன் லைன் முலம் விண்ணப்பித்து பட்டா பெறலாம் எனக்கூறிய போதும், அரக்கோணம், நெமிலி தாலுகாவில் நேரிடையாக நில அளவை ஆய்வாளரிடம் மனு அளித்தால், பெயர் மாற்றம் செய்யப்படுவதில்லை. நேரிடையாக மனு அளிக்கும் பொதுமக்களிடம் தேவையான பதிவேடுகள் இல்லை.

வில்லங்க சான்றிதழ் காலம் போதாதது, முந்தைய தாய் பத்திரங்கள் இல்லையெனக் கூறி மாத, ஆண்டு கணக்கில் அலைக்கழிப்பது வாடிக்கையாக உள்ளது. அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் நில அளவை பதிவேடுகள் துறை நகர சார் ஆய்வாளர் அலுவலகம் எப்போது திறந்திருக்கும் எனத் தெரியாமல் பொதுமக்கள் நாள் முழுக்க காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை உடனே திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரக்கோணத்தில் நகர சார் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்