சூளகிரி அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

சூளகிரி அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-08-23 18:06 GMT
சூளகிரி:
சூளகிரி அருகே பீலாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 52). இவர் சூளகிரி மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் முனியப்பா கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் அவர் மன வேதனையில் காணப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியப்பா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முனியப்பா மனவேதனையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
=======

மேலும் செய்திகள்