குடியாத்தத்தில் மாடியில் இருந்து தவறிவிழுந்து சிறுவன் பலி
மாடியில் இருந்து தவறிவிழுந்து சிறுவன் பலி
குடியாத்தம்
குடியாத்தம் டவுன் பிச்சனூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சங்கர். கார் டிரைவர். இவரது மனைவி பத்மாவதி தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுடைய மகன் தீபேஷ் (வயது 11). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தீபேஷ் நேற்று அவர்கள் வசிக்கும் இரண்டு அடுக்கு மாடியின் மொட்டை மாடியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தீபேஷ் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளான்.
இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தீபேஷை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் தீபேஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.