பெயர் பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை,
தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்திருக்க வேண்டும். பிற அரசு அலுவலகங்களில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் இந்த அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பெற இயலாது. உதவித்தொகை பெற தகுதிகள் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.