குன்னூரில் லேம்ஸ் ராக், டால்பின்நோஸ் காட்சி முனைகள் திறக்கப்படவில்லை

குன்னூரில் லேம்ஸ் ராக், டால்பின்நோஸ் காட்சி முனைகள் திறக்கப்படவில்லை.

Update: 2021-08-23 16:51 GMT
குன்னூர்,

குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா மற்றும் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் காட்சி முனைகள் உளளன. குன்னூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் லேம்ஸ் ராக் காட்சி முனையும், 12 கிலோ மீட்டர் தொலைவில் டால்பின் நோஸ் காட்சி முனையும் உள்ளது. இந்த சுற்றுலா தலங்கள் வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இங்கு 200 கடைகள் உள்ளன. 

இந்த கடைகளில் தேயிலை தூள், நீலகிரி தைலம், வாசனை திரவிய பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.  ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் காட்சி முனைகள் திறக்கப்படவில்லை. 

இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைவாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்