கெங்குவார்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க கோரிக்கை

கெங்குவார்பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-23 11:03 GMT

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி பகுதியில் சுமார் 400 ஏக்கர் அளவில் 2-ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இவ்வாறு பயிரிடப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. 
இந்தநிலையில் வருகிற செப்டம்பர் மாதம் மழை காலம் தொடங்க உள்ளதால் வயல்களில் நெல்கள் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கெங்குவார்பட்டியில் ஏற்கனவே முதல்போக சாகுபடியின்போது கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்