தனியார் செல்போன் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

குன்றத்தூரை அடுத்த தண்டலம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவர், தனியர் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வானகரம், செட்டியார் அகரம் அருகே மழையால் சேதமடைந்த இண்டர்நெட் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

Update: 2021-08-23 05:52 GMT
அப்போது மேலே சென்று கொண்டிருந்த இண்டர்நெட் வயரில் இணைப்பு கொடுக்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்சார வயரில் அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ்குமார், பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்