புதிதாக 27 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் புதிதாக 27 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை ெபற்று வந்த 32 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் புதிதாக 27 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை ெபற்று வந்த 32 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், லேசான தொற்று இருப்பவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 753 ஆக உயர்ந்து உள்ளது.
32 பேர் டிஸ்சார்ஜ்
அதே சமயம் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்த 32 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குமரி மாவட்டத்தில் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 310 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.