பேரையூர்,
பேரையூர் போலீசார் சூதாட்ட ஒழிப்பு சம்பந்தமாக கிளான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள மந்தையில் அதே ஊரை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 30), சின்னமணி (42), கணேசன் (58), மணிகாலை (39), தங்கவேல் (61) ஆகியோர் சூதாடி கொண்டி ருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.280-ஐ பறிமுதல் செய்தனர்.