மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார்

Update: 2021-08-22 20:50 GMT
சோமரசம்பேட்டை
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சரவணா புரத்தை சேர்ந்தவர் சந்திருகுமார்(வயது 36). சோமரசம்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதவத்தூர் அருகே மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்திருகுமார் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்